தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தப்பாட்டத்துடன் மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி - மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம்: தப்பாட்டத்துடன் நடந்த மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Election Awareness rally
விழிப்புணர்வு பேரணி

By

Published : Mar 9, 2021, 2:21 PM IST

சட்டப்பேரவை தேர்தலையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் அரண்மனை முன் மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று (மார்ச்8) தொடங்கிவைத்தார்.

இதில் 600க்கும் மேற்பட்ட மகளிர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பேரணியில், ’100% வாக்களிப்போம்: வாக்களிப்பது நம் கடமை’ போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் இடம்பெற்றிருந்தன. அரண்மணை முன் தொடங்கிய இந்தப் பேரணி மத்திய கொடிக்கம்பம், சாலைத்தெரு, ரோமன் சர்ச் வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.

தப்பாட்டத்துடன் மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

அங்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:நர்ஸிங் கல்லூரியை திறக்கக் கோரி மாணவிகள் காத்திருப்பு போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details