நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கொ.வீரராகவ ராவ் நடத்தி வருகிறார்.
‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ - செவிலியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - ramanathapuram collector
ராமநாதபுரம்: வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்திம், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அரசு செவிலியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
செவிலியர்கள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அந்த வகையில், இன்று ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் சேர்ந்து 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்திமாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல , 100 சதவீதம் வாக்குப்பதிவு உள்ளிட்ட பதாகைகளை செவிலியர்கள் ஏந்தி நின்றனர். அதேபோல், மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் முறை குறித்து விளக்கப்பட்டது.