ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சுடன் மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட ஆறு இடங்களில் 440 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க லாந்தை பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கரோனா சிகிச்சைப் பிரிவை தொடங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்க கிராம மக்கள் எதிர்ப்பு இந்நிலையில், லாந்தை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கரோனா சிகிச்சைப் பிரிவை அமைக்கக் கூடாது எனக் கூறி கல்லூரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னா் அவா்களில் சிலரை, தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்து வட்டாட்சியா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினார். அதன் பின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: சேவை செய்ய வாழ்க்கையை தியாகம் செய்தவர் இயேசு - பிரதமர் மோடி