பரமக்குடி அடுத்த கமுதக்குடி கிராமத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளி,தேசிய ஜவுளித்துறைக்கு சொந்தமான நூற்பாலை, அரசு சேமிப்பு கிடங்கு, பல்வேறு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் சுற்றுவட்டார கிராமத்திற்கு செல்லுபவர்கள் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் தினசரி சென்று வந்தனர். இந்த இரயில்வே கேட் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்பட்டதால், இதனை நிரந்தரமாக முடக்கூடாது என கமுதக்குடி கிராம மக்கள் மதுரை கோட்ட ரயில்வே துறைக்கும் , மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுக்களை 10 மாதங்களுக்கு முன்பு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ரயில்வே துறையினர் திடீரென இரயில்வே கேட்டில் பூட்டை போட்டு நிரந்தமாக மூடிவிட்டனர். இந்நிலையில், இன்று காலை இவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ரயிவே கேட் பூட்டப்பட்டதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றனர். மேலும் முக்கிய பாதையான இதனை நிரந்தரமாக மூடியதை கண்டித்தும், அதனை திறக்கக்கோரியும், கமுதக்குடி கிராமத்தினர் ரயிலை மறித்து முற்றுகையிட சென்றனர். அப்போது,அங்கு வந்த காவல்துறையின் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.