ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் இன்று விஜயகாந்தின் உடல்நலம் முன்னேற்றம் அடைய வேண்டி, புரோகிதர் இல்லத்தில் 19 புரோகிதர்கள் பங்கேற்று தில ஹோமம் செய்தனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் வரை இந்த ஹோமம் நடைபெற்றது. பின்னர் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட குடும்பத்தினருடன் சென்று இருந்தனர்.