தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகராட்சி அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல் - seized 70k of unaccounted money

ராமநாதபுரம்: கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கீழக்கரை நகராட்சி

By

Published : Oct 24, 2019, 9:40 AM IST

Updated : Oct 24, 2019, 9:50 AM IST

ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு வந்த புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர், புதன்கிழமை மாலை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாலை நான்கு மணிக்கு தொடங்கிய இச்சோதனை இரவு 7.30 மணி வரை தொடர்ந்தது, நகராட்சி ஆணையர் தனலட்சுமி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், பணியாளர்களை வெளியே விடாமல் விசாரணை செய்தனர். அப்போது அலுவலக கோப்புகள்,
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், பதிவேடுகள், வரவு செலவு கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அலுவலர்களிடம் இருந்து ரூ.1.05 லட்சத்தைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். இதில் அலுவலக பணம் போக கணக்கில் வராத ரூ.70 ஆயிரத்தை கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Oct 24, 2019, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details