கீழக்கரையை சேர்ந்த தனசேகர் என்பவருக்கு பட்டாசு கடை வைக்க பட்டா சிட்டா அனுமதி வழங்குவதற்கு, தாபேதார் செய்யது அப்துல் காதருக்கு கொடுப்பதற்காக ஓட்டுநர் சிங்காரம் ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனையறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், இராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று, திடீர் சோதனை நடத்தினர்.
லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவரிடம் விசாரணை! - ராமநாதபுரம் செய்திகள்
இராமநாதபுரம்: லஞ்சப் புகார் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
![லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவரிடம் விசாரணை! raid](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9426873-610-9426873-1604479290535.jpg)
raid
அப்போது, லஞ்சப்பணத்தை வாங்கிய சிங்காரம், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து தாபேதார் செய்யது அப்துல் காதர் மற்றும் ஓட்டுநர் சிங்காரத்திடம் கடந்த ஒரு மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவரிடம் விசாரணை!
இதையும் படிங்க: கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்; மடக்கி பிடித்த காவலர்கள்!
Last Updated : Nov 4, 2020, 3:07 PM IST