தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.60 ஆயிரம் பறிமுதல்! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

By

Published : Jan 12, 2021, 9:49 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்த வேலை பணிகளுக்கான தொகைகளை பெறுவதற்கு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து, ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் தலைமையில், ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் ஆகியோர் அடங்கிய குழு இன்று (ஜன.12) முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.60.000க்கும் மேல் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மங்களேஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிய வருகிறது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:கடலில் மிதந்துவந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மீட்பு

ABOUT THE AUTHOR

...view details