தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் ரெய்டு! - former admk union secretary

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை நடத்தியதில் 15 லட்சம் ரூபாய் பணம், 88 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் ரெய்டு
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் ரெய்டு

By

Published : Aug 6, 2021, 4:22 PM IST

ராமநாதபுரம்:போகலூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் இன்று (ஆக.6) சோதனை செய்தனர்.

போகலூர் அதிமுக ஒன்றிய செயலாளராக 14 ஆண்டுகளாக இருந்தவர் நாகநாதன். 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை போகலூர் ஒன்றிய சேர்மனாகவும் இருந்துள்ளார். மாவட்ட வேளாண் விற்பனை குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

திமுகவில் இணைந்தார்

கடந்த சில நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். போகலூர் ஒன்றிய சேர்மனாக இருந்த காலத்தில் சாலைகள், கலையரங்கம் கட்டியதில் ஊழல்கள் நடந்திருப்பதாக ஏற்பட்ட புகாரையடுத்து மாவட்ட நீதிபதி அனுமதியுடன் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் ரெய்டு

88 சவரன் நகை பறிமுதல்

இது குறித்து டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் கூறுகையில், "சோதனையில் ரூ.15 லட்சம், 88 சவரன் தங்க நகைகள், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை" என்றார். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details