ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் மெய்யரசன்(25). இதே மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளராக கவுதம்(35) என்பவர் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம் குறித்து, கால்நடை மருத்துவருக்கும், ஆய்வாளருக்கும் இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
கால்நடை மருத்துவரை தாக்கிய மருத்துவ ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் கால்நடை மருத்துவரை தாக்கிய கால்நடை ஆய்வாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர் மெய்யரசன்
இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த கவுதம், கால்நடை மருத்துவர் மெய்யரசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவர் மெய்யரசன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கவுதமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கால்நடை ஆய்வாளர் கவுதமை கைது செய்யக் கோரி ராமநாதபுரம் மாவட்ட கால்நடை மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.