தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி டிராக்டர் ஊர்வலம் நடத்தினால் வாகனங்கள் பறிமுதல் - ராமநாதபுரம் எஸ்பி! - டிராக்டர் பேரணி

அனுமதி இன்றி, விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை வைத்து ஊர்வலம் நடத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ராமநாதபுரம் எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனுமதியின்றி டிராக்டர்  ஊர்வலம் நடத்தினால் வாகனம் பறிமுதல்
அனுமதியின்றி டிராக்டர் ஊர்வலம் நடத்தினால் வாகனம் பறிமுதல்

By

Published : Jan 26, 2021, 5:06 AM IST

ராமநாதபுரம்: இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் ஜன. 26 ஆம் தேதி கொண்டாடுகிறது. அன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கட்சியினர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் எதிராக, அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் வாகனங்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அவ்வாறு அதிகமான மக்கள் கூடி போராட்டம் நடத்தும் பட்சத்தில் கரோனா பரவும் அபாயம் உள்ளதாலும், விவசாய உரிமம் பெற்ற டிராக்டர் வாகனங்களை, அனுமதியின்றி போராட்டங்களில் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட டிராக்டர் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சவுதியில் இறந்த கணவனின் உடல் என்ன ஆனது - மாவட்ட ஆட்சியரிடத்தில் மனைவி முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details