தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜினாமா செய்ய தயாராகும் 429 ஊரட்சி மன்றத் தலைவர்கள்? - protest in ramanathapuram

ராமநாதபுரம்: ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்புத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்

By

Published : Sep 28, 2021, 11:16 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் உள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிதி உள்ளிட்டவை வழங்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்புத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், "ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வரும் அனைத்துப் பணிகளையும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி ஊராட்சித் தலைவர் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள்

ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு சில ஊராட்சி மன்றத் தலைவர்கள் வேண்டும் என்ற ஒரு சில அலுவலர்களை மிரட்டுவதைத் தடுக்க வேண்டும்.

தேங்கிக் கிடக்கும் உபரி நிதிகளைப் பஞ்சாயத்து வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிட எந்தவிதமான எதிர்பார்ப்பும், நிபந்தனையுமின்றி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்" உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் போக்கு இப்படியே நீடித்தால் ஒட்டுமொத்தமாக 429 ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:ஊராட்சி தேர்தல் நடத்த வேண்டாம் - மக்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details