தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனை மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து: இருவர் பலி - இருசக்கர வாகனம் விபத்து

ராமாநாதபுரம்: கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பனை மரத்தின் மீது மோதியதில் இருவர் பலியாகினர்.

two died in accident
இரு சக்கர வாகனம் மோதி இளைஞர் இருவர் பலி

By

Published : Mar 13, 2021, 11:07 AM IST

ராமநாதபுரம் காய்கறிச் சந்தையில் பணிபுரிந்து வரும் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் கார்த்திக், தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் (பஜாஜ்) பணிபுரிந்து வரும் கர்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்களும் ராமநாதபுரத்திலிருந்து தேர்போகி கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையின் ஓரத்தில் இருந்த பனை மரத்தின்மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை: இருவர் கைது, 6 கிலோ கஞ்சா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details