பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது குருபூஜை மற்றும் பிறந்த நாள் விழா நாளை (அக்.30) ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.
முதலில் இந்த குருபூஜையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென அவருக்கு ஏற்பட்ட முதுகு வலியின் காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனைப்படி பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது.