இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்த்திடும் நோக்கில், மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சந்தைகள், காய்கறி, பழக்கடைகளில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து சிரமமின்றி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக, ராமநாதபுரம் நகரில் பழைய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.