ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகில் இருவர் வந்திருப்பதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் அளித்தனர்.
சட்டவிரோதமாக வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது - இராமேஸ்வரம்
ராமநாதபுரம்: சட்டவிரோதமாக அரிச்சல்முனை பகுதிக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த இருவரை கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது
இதனையடுத்து அங்கு சென்று அலுவலர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியபோது வட்ட கண்ட மன்னாரைச் சேர்ந்த நாகேஷ், அடம்பன் மன்னாரைச் சேர்ந்த பிரதாப் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க:பாலின சமத்துவத்தில் இந்தியா?