தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கனமழை: இடிதாக்கியதில் இருவர் உயிரிழப்பு!

ராமநாதபுரம்: நேற்று (மே 19) பெய்த கனமழையின் காரணமாக வெவ்வேறு பகுதிகளில் இடிதாக்கியத்தில் இருவர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: இடிதாக்கியதில் இருவர் உயிரிழப்பு!
ராமநாதபுரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: இடிதாக்கியதில் இருவர் உயிரிழப்பு!

By

Published : May 20, 2021, 10:22 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே19) பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், பார்த்திபனூர் அருகேவுள்ள தேவனேரி செய்யாங்கலம் கிராமத்தில் ஆடு மேய்க்கச் சென்ற போது பழனி என்பவர் இடிதாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து பார்த்திபனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல திருப்பாலைக்குடி மேட்டு சோழந்தூர் கிராமத்தைச் சேர்ந்த குஞ்சரம் என்ற பெண், வீட்டின் அருகே விவசாயப் பணி செய்துகொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

நேற்று பெய்த கனமழையால் வெவ்வேறு இடங்களில் இரண்டு பேர் இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details