ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் கடத்தல், ஊடுருவல், எல்லைப் பிரச்னையைக் குறைக்கும் விதமாக இரண்டு புதிய கப்பல்கள் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு கப்பல்களும் குந்துகல் கடல் பகுதியிலிருந்து நேற்று (பிப். 22) பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து சென்றன.
மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படைக்கு புதிதாக இரண்டு கப்பல்கள்! - Mannar Valaikuda
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய கடற்படைக்கு புதிதாக இரண்டு கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.
![மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படைக்கு புதிதாக இரண்டு கப்பல்கள்! ராமநாதபுரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10739204-thumbnail-3x2-ship.jpg)
ராமநாதபுரம்
பாம்பன் பாலத்தைக் கடந்துசென்ற இரண்டு புதிய கப்பல்கள்
இந்தக் கப்பல்கள் எல்லைப்பகுதி மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்குப் பயன்படும் என்றும் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து செல்லும்போது பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு சுற்றுலாப் பயணிகள் பலர், தங்களது மொபைல் போனில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: கருவேப்பிலையுடன் ஒரு செல்ஃபி... ஏனா அதோட மவுசு அப்படி!