ராமநாதபுரத்தில் அதிகளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக சுகாதாரத் துறைக்குத் தொடர்ந்து தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் சுகாதாரத் துறையினர் விசாரித்ததில், பனைகுளத்தில் வசித்துவரும் அக்பர் அலி (53) மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து கொண்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சன்னதி தெருவில் மல்லிகை பார்மா என்ற பெயரில் தோல்நோய் மருத்துவராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தது தெரிந்தது.
இதனையடுத்து சுகாதாரத் துறை இணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமையில் சென்ற மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவரிடம் சான்றிதழ் இல்லாதையடுத்து போலி மருத்துவர் என்பதை உறுதி செய்தனர். பின் இது குறித்து பஜார் காவல் நிலையத்திற்கு சுகாதாரத் துறையினர் தெரியப்படுத்திய நிலையில், காவல் துறையினர் அக்பர் அலியை கைது செய்தனர்.