தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு- அச்சத்தில் மக்கள் - 2 children affected

ராமநாதபுரத்தில் 6 வயது , 7 மாத ஆண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு
இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு

By

Published : Jul 16, 2021, 12:47 PM IST

ராமநாதபுரம்: மண்டபம் பகுதியில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை ஐந்து பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் ஆறு வயது ஆண் குழந்தை, திருப்பாலைக்குடியைச் சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தைக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கரோனா நிலவரம்: ஒரே நாளில் 38,949 பேருக்கு பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details