ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, பார்த்திபனூர், கமுதக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடுபோயின. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் பார்த்திபனூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கமுதக்குடி கிராமத்திலிருந்து ஆடுகளை திருடி அபிராமம் சந்தைக்கு விற்க சென்ற இரண்டு பேர் காவல் துறையினரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் பரமக்குடி மேலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.