தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகளின் ஆபாச படங்கள் விற்பனை செய்த இருவர் போக்சோவில் கைது! - குழந்தைகளின் ஆபாச படங்கள் விற்பனை செய்த இருவர் போக்சோவில் கைது

ராமநாதபுரம்: குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்ததாக இருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Two arrested for selling child pornography
Two arrested for selling child pornography

By

Published : Mar 9, 2020, 8:53 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியிலுள்ள கடைகளில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் துறையின் புகார் எண்ணிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கமுதி காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையிலான காவலர்கள் கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில் கமுதி பேருந்து நிலையம் அருகே சிடி விற்பனைக் கடையில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தைகள் ஆபாச படங்களைப் பதிவிறக்கம் செய்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. உடனே கடையின் உரிமையாளர் பொன் இருள், அங்கு வேலை பார்த்த வழிவிட்டான் ஆகிய இருவரையும் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க:பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய டாக்ஸி ஓட்டுநர் கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details