தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பண்டிகை: பரமக்குடியில் மஞ்சள் அறுவடை தீவிரம் - பரமக்குடி அருகே 4.3 ஹெக்டேர் மஞ்சள் அறுவடை

இராமநாதபுரம்: பரமக்குடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயிரிடப்பட்டுள்ள 4.3 ஹெக்டேர் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

turmeric yield increased
turmeric yield increased

By

Published : Jan 13, 2020, 3:10 PM IST

ராமநாதபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சரிவர மழைப்பொழிவு இல்லாததால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகினர். கடும் வறட்சியால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மழைப் பொழிவு சராசரி அளவை விட அதிகமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு மட்டும் ராமநாதபுரத்தில் 914 மி.மீ. மழைப் பொழிவு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊரணிகளில் நீர் நிரம்பியது. மேலும், மழைப் பொழிவின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, தங்களது நிலங்களில் சிறுதானியங்கள், நெற்பயிர்கள் உள்ளிட்டவற்றை விவசாயம் செய்யத் தொடங்கினர்.

உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வான தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட பச்சரிசி, கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவது வழக்கம். அதேபோல் பானையில் மஞ்சள் கொத்து சுற்றி தான் பொங்கல் வைப்பார்கள்.

அதனால் மஞ்சள் கொத்து பொங்கல் பண்டிகையில் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. பொங்கலுக்காக ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தின் பரமக்குடி நகரில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களிலும் சுமார் 4.3 ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் விவசாயம் இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மஞ்சள் பட்டினம் கிராமத்தில் மஞ்சள் விவசாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் விவசாயம் செய்ய பெருமளவு நீர் தேவைப்படுவதால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் மட்டுமே இந்த விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது.

பரமக்குடி அருகே 4.3 ஹெக்டேர் மஞ்சள் அறுவடை
இதுகுறித்து பேசிய விவசாயி நடராஜன், 'மஞ்சள் பயிரிடுவதால் எங்கள் கிராமத்துக்கு மஞ்சள்பட்டிணம் என்று பெயர் வந்தது. எங்கள் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக மஞ்சள் கொத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு யாரும் ஏக்கர் கணக்கில் மஞ்சள் பயிர் விளைந்து இல்லை. மஞ்சள் பயிர் ஆடி மாதத்தில் விதையிட்டு ஆறு மாதத்திற்கு பிறகு பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறுவடை செய்வோம்.

இதை சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். 5 சென்ட் நிலத்தில் பயிரிட 5 ஆயிரம் ரூபாய் செலவிட்டால் அதில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். பெருமளவில் லாபம் இல்லாவிட்டாலும் பாரம்பரியத்தைக் கைவிடக்கூடாது என்பதற்காக மஞ்சள் விவசாயம் செய்து வருகிறோம்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமேசான் மீது வழக்கு


ABOUT THE AUTHOR

...view details