சென்னை எண்ணூர் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறு குடும்பங்கள் உள்பட 19 பேர் வாடகை வேனில் ராமேஸ்வரத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளனர்.
முதலில் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். அதிகாலையில் மண்டபம் கடற்கரை பூங்கா பகுதியில் வேன் சென்றுகொண்டிருந்தபோது மழை பெய்ததால் வாகனத்தின் வேகத்தை குறைக்க ஓட்டுநர் பிரேக் அடித்ததும் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அருகிலிருந்த சாலை பள்ளத்தில் உருண்டு விழுந்தது.
இதில் வாகனத்திலிருந்த 13 பேர் காயமடைந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.