தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது குறைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம் - போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.

Transport minister Rajakannappan
Transport minister Rajakannappan

By

Published : Jul 30, 2021, 2:35 PM IST

ராமநாதபுரம்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 333 பேருக்கு நிதி உதவியும் 369 பயனாளிகளுக்கு ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் இன்று (ஜூலை.30) நடைபெற்றது.

பெண்கள் இலவச பயணம் - ரூ. 1358 கோடி நஷ்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், " கீழக்கரை மேம்பால பணி விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயணத்தின் மூலமாக போக்குவரத்து துறைக்கு 1358 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறை வெளிப்படையாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து குறைப்பதற்கான நடவடிக்கை ஏதும் இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "போக்குவரத்து துறையில் 55 வயதுக்கு மேல் உள்ள உடல் தகுதியுள்ளவர்களை பேருந்து இயக்க அனுமதிக்கிறோம்.

உடலளவில் ஏதேனும் பிரச்னை இருப்பின் அவர்களுக்கு தகுந்தாற்போல் வேலை மாற்றி தரப்படும். இது தொழிலாளர்களின் நலன் சார்ந்த அரசு" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்து ஓய்வு நீதிபதி குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்- தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details