ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, மண்டபம், ஏர்வாடி என பல்வேறு வனச்சரகங்கள் உள்ளன. பொதுவாக கோடை வெயில் காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவும் அபாயம் உள்ள நிலையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறையினருக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில், காட்டுத் தீ ஏற்படும் போது அதனை அணைக்கும் முறை, ஆயுதங்களின் பயன்பாடு, காட்டு விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது போன்ற செயல்முறைகள் குறித்து சென்னையில் இருந்து வந்த 10 பேர் கொண்ட வன உயரடுக்குப் படையினர், ராமநாதபுரம் வனத்துறையினருக்கு பயிற்சி அளித்தனர்.