தமிழ்நாடு முழுவதும் மூன்று சக்கர சைக்கிள்களில் மோட்டார்கள் பொருத்தி இயக்கப்படுகின்றன. இந்த மோட்டார்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஒரு சில பகுதிகளில் மோட்டார்கள் அகற்றப்பட்டன. ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மூன்று சக்கர சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் அகற்றப்படவில்லை.
மூன்று சக்கர சைக்கிள்களில் உள்ள மோட்டார்களை அகற்றிய டிராபிக் ராமசாமி - டிராபிக் ராமசாமி
ராமநாதபுரம்: பரமக்குடியில் மூன்று சக்கர சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்களை டிராபிக் ராமசாமி அகற்றினார்.
traffic
இந்நிலையில், இன்று (மார்ச் 19) டிராபிக் ராமசாமி பரமக்குடியில் மோட்டார் பொருத்தி வலம்வந்த மூன்று சக்கர சைக்கிள்களிலிருந்த மோட்டார்களை போக்குவரத்து காவலர்கள் முன்னிலையில் அகற்றினார்.
தொடர்ந்து பரமக்குடி நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனர்களை அகற்றினார். அப்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட காவலர்கள் உடன் இருந்தனர்.