ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு கடல் பகுதிகளில் தொடர்ந்து மீனவர்கள் பலர் இரட்டைமடி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல் வளம் அழிவதோடு, மீன்களின் இனப்பெருக்கமும் குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முறை மீன் பிடிப்புக்கு பல அரசு அலுவலர்களும் உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இந்த மீன் பிடிப்பு முறையை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக்கோரி பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.