தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை! - ஆவணி அமாவாசை

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை
சுற்றுலா பயணிகளுக்கு தடை

By

Published : Sep 5, 2021, 12:24 PM IST

ராமநாதபுரம்: சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல இரண்டு நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து வரும் நிலையில் மூன்றாம் அலையை தாக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், வாரத்தின் இறுதி மூன்று நாள்களும் கோயில்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஞாயிற்று கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர். அதேபோல் நாளை ஆவணி அமாவசை என்பதால் மக்கள் கடற்கரையில் கூடுவதை தடுக்க நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் இரண்டு நாள்களுக்கு தனுஷ்கோடிக்குச் செல்ல முடியாது.

இதையும் படிங்க: மீன்களை உலர்த்த களம் அமைத்துத் தரக் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details