ராமநாதபுரம்: கரோனா இரண்டாம் அலை பரவலையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மேலும், தமிழ்நாடு அரசு கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்திருந்தாலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை தொடர்ந்தது.
தனுஷ்கோடி செல்லும் வழியில் காவல் துறையினர் பேரிகார்டுகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 17) மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.