ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர், சின்னதம்பி. இவர் சொந்தமாக 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல மேய்ச்சலுக்குச் சென்று விட்டு ஆடுகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையைக் கடக்க முயன்றபோது, ராமேஸ்வரத்தில் இருந்து திருப்புவனம் நோக்கிச்சென்ற சுற்றுலா வேன் ஒன்று, மோதியதில் செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.