ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடற்பகுதி வழியாக இலங்கைக்கு போதைப்பொருள்கள், கஞ்சா, புகையிலை உள்ளிட்டவைகளை கடத்துவது தொடர்கதையாகி வருகின்றன.
நேற்று மாலை மன்னார் வளைகுடா கடற்பகுதி வழியாக கடத்தப்பட்ட பீடி இலைகளை, கண்டெய்னர் லாரி மூலமாக கொண்டு செல்வதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து நீர்கொழும்பு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது நீர்கொழும்பிலிருந்து கல்கண்டா பகுதிக்குச் சென்ற கண்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது, 39 சாக்குகளில் ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருந்தது. இந்த பீடி பண்டல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையில் பீடி இலைகள் தமிழ்நாட்டிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் கொழும்பு சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கண்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!