புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கில் திருச்சி, காரைக்குடி, ராமேஸ்வரம், மதுரைச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி உள்ளது.
இங்கு, 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், நான்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தற்போது வேறு ஒரு நபர் சுங்கச்சாவடியை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளார்.
இதனால், பழைய ஒப்பந்தகாரர் ஊழியர்களின் சம்பள பாக்கி, போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாலை (டிச.05) சுங்க சாவடியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுங்கச் சாவடி ஊழியர்கள் இதனால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுங்க சாவடியை பொருத்தவரை ஐந்து சாவடிகள் உள்ளன. தற்போது இரண்டு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் போனஸ், சம்பள பாக்கியை தரவில்லை என்றால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், சுங்கச்சாவடி வசூல் நிறுத்தப்பட்டு வாகனங்கள் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு குடிநீர் வாரிய தொழிற்சங்கத்தினர் போராட்டம்