ராமநாதபுரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அரசு போக்குவரத்து பேருந்து நடத்துநர் செல்வக்குமார், தனது சொந்த வேலை காரணமாக கிளை மேலாளர் பத்மகுமாரிடம் விடுமுறை கேட்டபோது, அவருக்கு விடுமுறை தர மறுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரைத் தாக்கியும் காயப்படுத்தியுள்ளார்.
விடுப்பு கேட்ட நடத்துநரை அடித்த கிளை மேளாலர்: ஊழியர்கள் போராட்டம்! - இராமநாதபுரம் போக்குவரத்து போராட்டம்
ராமநாதபுரம்: நடத்துநரைத் தாக்கிய அரசு போக்குவரத்து கிளை மேலாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

லீவ் கேட்ட பேருந்து நடத்துநரை அடித்த கிளை மேளாலர்: ஊழியர்கள் போராட்டம்
காயமடைந்த செல்வக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இன்று வரை எடுக்காததால். காவல்துறை மீது குற்றம்சாட்டியும், கிளை மேளாலர் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், பேருந்து பணிமனை வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்