லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா-சீனா மோதல்: தமிழ்நாட்டு வீரர் வீரமரணம் - சீனா மோதல்
13:50 June 16
லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தோடு ஏற்பட்ட மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
இதில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி என்ற வீரரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பழனியின் சொந்த ஊர் ராமநாதபுரத்தின் திருவாடானை தாலுகாவில் உகல கடுக்கலூர் என்ற கிராமம் ஆகும். பழனி கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றிவந்துள்ளார். இவருக்கு 10 வயதில் மகனும் 8 வயதில் மகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழனியின் உடல் நாளை அவரது சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரில் பழனியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.