ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பழனி. இவர் ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் உயிரிழந்தார்.
வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ஆளுநர் சார்பாக நிவாரணம் - India - China
ராமநாதபுரம்: இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே கிழக்கு லடாக்கில் நடந்த மோதலில் வீர மரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் சிறப்பு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான கடுக்கலூரில் ஜூன் 18ஆம் தேதி அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ரூ. 20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் நேர்முக உதவியாளர் மேஜர் அஜய் ரத்தோர் இன்று பழனியின் சொந்த ஊரான கடுக்கலூரிக்கு நேரில் சென்று பழனியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஆளுநர் சிறப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்திற்கான காசோலை பழனியின் மனைவி வானதியிடம் வழங்கப்பட்டது.