தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

22 புனித தீர்த்தங்களில் நீராட தடை - தீர்த்த பாட்டில்கள் விற்பனை அமோகம் - ramanadhapuram district news

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தொடர்ந்து தடை நீடிப்பதால், அங்கு தீர்த்த பாட்டில்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீர்த்த பாட்டில்கள் விற்பனை அமோகம்
தீர்த்த பாட்டில்கள் விற்பனை அமோகம்

By

Published : Jul 31, 2021, 3:23 PM IST

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலுருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் குளித்துவிட்டு கோயிலின் உட்புறத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், 22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடுவது வழக்கம்.

ஆனால் கரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அறிவித்த பல்வேறு கட்டுபாடுகளில் தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அரை லிட்டர் கோடி தீர்த்தம் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

தீர்த்த பாட்டில்கள் விற்பனை அமோகம்

கடந்த காலங்களில் தினமும் 200, 300 பாட்டில்களுக்கு குறைவாகவே தீர்த்த பாட்டில்கள் விற்பனை இருந்த நிலையில், தற்போது தீர்த்தங்களில் நீராட தடை இருப்பதால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தீர்த்த பாட்டில்கள் விற்பனையாகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடைகள் திறக்க அனுமதி இல்லை - வேதனையில் வியாபாரிகள்

ABOUT THE AUTHOR

...view details