இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து மூன்று இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல இருப்பதாக கடற்படைக்குத் தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில், கடற்படையினர் கடல் பகுதியில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று நபர்களை விசாரணை செய்தனர். விசாரணையில், தர்மபுரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம், கோவையைச் சேர்ந்த அருள் வசந்தன், சென்னையைச் சேர்ந்த மயூரன் என்பது தெரியவந்தது.