ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி அம்மாவட்டத்தில் 803 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.