தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெட்டனேட்டர்கள் வைத்து மீன்பிடித்த 3 மீனவர்கள் கைது!

ராமநாதபுரம்: தேவிப்பட்டிணம் அருகே வெடி வைத்து மீன் பிடித்த மூன்று மீனவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

By

Published : Jul 30, 2021, 7:19 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டிணம் அருகே சட்டவிரோதமான முறையில் மீன் பிடிக்கப்பட்டு வருவதாக கடலோர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மோர்பண்ணை மீனவர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டபோது, வெடி வைத்து மீன் பிடிக்க வைத்திருந்த 22 ஜெலட்டின் குச்சிகள், ஐந்து டெட்டனேட்டர்கள், ஒரு அடி பீஸ் வயர் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் கண்டெடுத்தனர். தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து, மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த கென்னடி, கோவிந்தராஜ், ஆறுமுகம் உள்ளிட்ட நான்கு மீனவர்களை கைது செய்தனர்.

இது போன்ற முறைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடல் வளம் அழியும் என வனத்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை தேவிப்பட்டிணம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் - பைஸாபாத் இடையே அதிவேக சிறப்பு ரயில் - மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details