தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய விளையாட்டு குறித்த முதல் நாள் பயிற்சி இன்று தொடக்கம்! - புதிய விளையாட்டு குறித்த முதல் நாள் பயிற்சி இன்று துவக்கம்

ராமநாதபுரம்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு குறித்த சிறப்பு மூன்று நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது.

Physical education teacher in Ramanathapuram
Physical education teacher in Ramanathapuram

By

Published : Dec 19, 2019, 2:06 PM IST

தமிழ்நாட்டில் புதிய விளையாட்டுகளாக கேரம், ஜிம்னாஸ்டிக், தேக்வாண்டோ, கடல் கூடைப்பந்து, சதுரங்கம், உள்ளிட்ட 12 விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதற்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மூன்று மாவட்டங்களை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்திலுள்ள, கேரம் உள்விளையாட்டு கலையரங்கத்தில் தொடங்கியது.

புதிய விளையாட்டு குறித்த பயிற்சி

இதனை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தொடக்கி வைத்தார். பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் - காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details