ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு, ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்த இருப்பதாக பிரத்யேக தொலைபேசி எண் மூலம் ரகசியத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருவாடானை துணை காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் ஒன்பது சார்பு ஆய்வாளர் கொண்ட குழுவை உருவாக்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் திருவாடானை எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட், 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், அபுல் கலாம் ஆசாத், அருள்தாஸ் உள்ளிட்ட ஒன்பது பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கூறுகையில், 'ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களைக் கடத்த இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பல்வேறுப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் திருவாடானை எல்லைப்பகுதியில் ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது பல்வேறு வகையான போதைப்பொருள்கள், செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.