தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த மூன்று பேர் கைது! - மூன்று பேர் கைது

ராமநாதபுரம்: கடலுக்குள் நாட்டுப் படகை எடுத்துக் கொண்டு, சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

illegal

By

Published : Jun 26, 2019, 8:54 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அருகே முனைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி. இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகதி ஒருவர் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளார், கூடவே மண்டபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு படகு ஓட்டிகளையும் கடலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இவர்கள் மூன்று பேர் சென்ற நாட்டுப் படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details