தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனிமொழி எம்பி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ராமநாதபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக கனிமொழி எம்பி உள்ளிட்ட 1199 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Thousands of people including Tuticorin MP Kanimozhi lodged with police
Thousands of people including Tuticorin MP Kanimozhi lodged with police

By

Published : Feb 9, 2020, 10:34 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் சந்தை திடல் பகுதியில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான அனைத்துக்கட்சி பொதுக்கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்டது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனைவரும் எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமனாது இரண்டாவது சுதந்திர போராடத்தை போன்றது எனவும் தெரிவித்திருந்தார்.

கனிமொழி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கேணிக்கரை காவல் துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நவாஸ்கனி உள்ளிட்ட 1199 பேர் மீது உரிய அனுமதி இன்றி பொதுக்கூட்டம் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: வயல்வெளியில் மலைப்பாம்பு... போராடி காட்டிற்குள் விட்ட இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details