ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக குறைந்துவருகிறது. இதனைத் தொடர்ந்து வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும் கோவிலுக்குள் தீர்த்தம், பிரசாதங்கள் உள்ளிட்டவை வழங்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளி மாநில, மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவாதரையில் ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 9) ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.
சமூக இடைவெளி இன்றி நீராடிய பக்தர்கள்
இவர்கள் தகுந்த இடைவெளி இல்லாமல் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் குறைந்து வந்த கரோனா தொற்றின் தாக்கம், மீண்டும் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரின் முன்னெச்சரிக்கை ஏற்பாடின்மையே பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றாமைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:5 லட்சம் ரூபாய் மதிப்புடைய புகையிலை பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது