ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பானை மணி. நேற்று தலையில் முண்டாசு கட்டி பானையைச் சுமந்துகொண்டே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தன்னந்தனியாகப் படையெடுத்த இவர் திருவாடானை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்தார். 68 வயதான இவருக்கு இது 19ஆவது அனுபவம்.
வாழும் கஜினி முகமது
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நான்கு முறை, இளையான்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று முறை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தேர்தல், திருப்பத்தூர், திருச்செந்தூர் இடைத்தேர்தல், சிவகங்கை மக்களவைத் தேர்தல், ராமநாதபுரம் நகராட்சித் தேர்தல் என இதுவரை மொத்தம் 18 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியை மட்டுமே சந்தித்தாலும் சலிப்படையாத பானை மணியை நிகழ்கால கஜினி முகமது என்றே சொல்லலாம்.