ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. நாளை தேவரின் 112ஆவது பிறந்த நாள் மட்டும் 57வது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவரின் நினைவிடத்தில், நாளை நடைபெறவுள்ள விழாவில் காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.