இராமநாதபுரம்: சாயல்குடி அருகே உள்ள கூறங்கோட்டை கிராமப் பகுதியில் தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை அப்பகுதியில் இருந்த வெறி நாய்கள் துரத்தி கடித்துள்ளன.
இதுகுறித்து, கிராம மக்கள் வனத்துறையிடம் தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு சென்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சென்ற வனத்துறையினர் மானை மீட்டனர். காயமடைந்தது 2 வயது பெண் மான் என்பது தெரிய வந்துள்ளது.