இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 89ஆவது பிறந்த தினம் இன்று (அக். 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அவரின் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் அப்துல் கலாமின் உறவினர்கள் சிறப்பு துவா செய்தனர். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாக் ஆகியோர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செய்தனர்.