ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கண்டிலான் வாக்குச்சாவடியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கண்டிலான் வாக்குச்சாவடி பூத் எண் 219இல், இன்று காலை முதல் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர். கண்டிலான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும், அங்குள்ள சமுதாயக் கூடத்திலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை அப்பகுதியில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக பூத் எண் 219இல், மழையினால் மேற்கூரை இடிந்து சேதம் அடைந்தது. அப்போது வாக்களிப்பதற்காகக் காத்திருந்த புவனேஸ்வரி, முனியசாமி, பூமி கிருஷ்ணன், தாமோதரன், முருகன் ஆகிய ஐந்து பேருக்கும் காயம் ஏற்பட்டது.